வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் ஊருக்குள் புகுந்து ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. அவை தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் ஊருக்குள் புகுந்து ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. அவை தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
காட்டு யானைகள்
மலைப்பிரதேசமான வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
தற்போது வால்பாறை பகுதியில் வறட்சி தொடங்கிவிட்டதால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் வர தொடங்கி உள்ளது.
ரேஷன் கடையை உடைத்தது
இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள தாய்முடி, நல்லமுடி பூஞ்சோலை, தோனிமுடி ஆகிய எஸ்டேட் பகுதியில் 3 குட்டிக ளுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவில் தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தன.
பின்னர் அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை உடைத்து உள்ளே இருக்கும் ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளதை தூக்கி வீசி நாசப்படுத்தின. பின்னர் அவை தொழிலாளர்கள் வீடுகளுக்குள்ளும் நுழைய முயற்சி செய்தது.
தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவற்றை துரத்தினார்கள். அப்போது அங்கிருந்து சென்ற யானைகள், வனப்பகுதிக்குள் செல்லாமல் தாய்முடி எஸ்டேட் மற்றும் சோலையாறு எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்கு இடைப்பட்ட இடத்தில் முகாமிட்டு நின்றன.
இதனால் இந்த 2 எஸ்டேட் பகுதியிலும் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிட்டு உள்ளதால், அதன் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் பயத்துடன் இருக்கும் நிலை நீடித்து உள்ளது. எனவே அங்கு மானாம்பள்ளி வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story






