நெல் கோட்டையை ஊர்வலமாக கொண்டு வந்த விவசாயிகள்


நெல் கோட்டையை ஊர்வலமாக கொண்டு வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 18 Jan 2022 9:50 PM IST (Updated: 18 Jan 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு நெல் கோட்டையை விவசாயிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு நெல் கோட்டையை விவசாயிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
நெல்கோட்டை
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 1500 ஏக்கர் நிலம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
 ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று இந்த நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து நெல்ேகாட்டையாக கட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
ஊர்வலமாக வந்தனர்
அதன்படி இந்த ஆண்டும் தைப்பூசத்தையொட்டி நேற்று விவசாயிகள் நெல்கோட்டையை வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வந்தனர். முன்னதாக நெல்கோட்டையை வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். 
பின்னர்  நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் பணியாளர்களுக்கு யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி பிரசாதமாக நெல் கதிர்களை வழங்கினார். இந்த நெல்லை அரிசியாக்கி இரண்டாம் காலத்தில் சுவாமிக்கு நைய்வேத்தியம் செய்யப்பட்டது.
1 More update

Next Story