கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா? என்று வனத்துறையினர் 2-வது நாளாக காத்திருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்


கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா? என்று வனத்துறையினர்  2-வது நாளாக காத்திருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
x
தினத்தந்தி 18 Jan 2022 10:13 PM IST (Updated: 18 Jan 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா? என்று வனத்துறையினர் 2-வது நாளாக காத்திருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்


போத்தனூர்

கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா? என்று வனத்துறையினர்  2-வது நாளாக காத்திருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

குடோனில் பதுங்கிய சிறுத்தை

கோவையை அடுத்த மதுக்கரையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கொன்று அட்டகாசம் செய்தது. 

இந்த நிலையில் குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை பதுங்கி இருப்பது நேற்று முன்தினம் வனத்துறையினருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குடோனின் இரு வாயில் பகுதியிலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

நேற்று 2-வது நளாக 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். 

மேலும் சிறுத்தை தாக்கினால் காயம் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்பு உடைகள் அணிந்து உள்ளனர். 

மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. 

இதில் குடோனில் சிறுத்தை நடமாடும் காட்சி பதிவாகி உள்ளது.

கூண்டில் சிக்குமா?

இந்த நிலையில் சிறுத்தையை நடமாட்டத்தை கண்காணிக்க நேற்று டிரோன் கேமரா மூலம் குடோன் கண்காணிக்கப்பட்டது. 

குடோனை விட்டு சிறுத்தை தப்பித்து சென்று முடியாதபடி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  

2-வது நாளாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் காத்திருந்து கண்காணித்து வருகின்றனர்.  

இதுகுறித்து மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது

தனியார் குடோனில் 3 வயது ஆண் சிறுத்தை பதுங்கி உள்ளது. மேலும் மதுக்கரை பகுதியில் கடந்த 2 மாதங்களாக நாய்களை கொன்று வந்தது இந்த சிறுத்தைதான் என்பத கால்தடங்களின் அடையாளம் வைத்து உறுதி படுத்தப்பட்டு உள்ளது. 

சிறுத்தை குடோனில் இருந்து தப்பித்து வெளியே செல்ல முடியாதபடி அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. 

குடோனின் இரு வாயில் பகுதிகளிலும் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. 

அந்த கூண்டில் சிக்குமா? என்று எதிர்பார்த்து உள்ளோம். டிரோன் மூலமும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றோம். 

கூண்டிற்குள் சிறுத்தை சிக்கினால் சிறுமுகை பகுதியில் உள்ள பவானிசாகர் அணையின் ஒருபகுதியில் விட திட்டமிட்டு உள்ளோம். 

இரவு நேரத்தில் சிறுத்தையை கண்காணிக்க தேவையான மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 

சிறுத்தை பிடிபட்டால் சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டர் தயாராக உள்ளார். 

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story