பொள்ளாச்சி பகுதியில் 261 பேருக்கு கொரோனா உறுதி


பொள்ளாச்சி பகுதியில் 261 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 19 Jan 2022 9:31 PM IST (Updated: 19 Jan 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

261 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் 64 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 11 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 68 பேருக்கும், தெற்கில் 40 பேருக்கும், 

ஆனைமலையில் 22 பேருக்கும், கிணத்துக்கடவு தாலுகாவில் 56 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் 261 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலைய வளாகம் மற்றும் அதே வளாகத்தில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் நகராட்சி பகுதியில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 795 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே நெம்பர் 10.முத்தூர் சங்கராயபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல கோவை-பொள்ளாச்சி மெயின்ரோட்டில் சினிமா தியேட்டர் அருகில் உள்ள வங்கியில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்ட தனியார் நிறுவனம், வங்கிகளுக்கு நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையிளான மருத்துவ குழுவினர் பார்வையிட்டனர். 

தொடர்ந்து சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன் மேற்பார்வையில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் வங்கியை 3 நாட்கள் மூட சுகாதாரதுறையினர் உத்தரவிட்டனர். அதேபோல தனியார் நிறுவனத்தையும் 5 நாட்கள் மூட அறிவுறுத்தப்பட்டது. 
1 More update

Next Story