அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி படுகாயம்


அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி படுகாயம்
x
தினத்தந்தி 19 Jan 2022 10:15 PM IST (Updated: 19 Jan 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

வடவள்ளியில் அரசு பஸ் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். குழாய் பதிக்க தோண்டிய குழியை சரியாக மூடாததால் அ டிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

வடவள்ளி

வடவள்ளியில் அரசு பஸ் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.   குழாய் பதிக்க தோண்டிய குழியை சரியாக மூடாததால் அ டிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

கியாஸ் குழாய் பதிக்க குழி

கோவையை அடுத்த வடவள்ளி பகுதியில் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மருதமலை அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்கு சாலை யோரத்தில் குழி தோண்டி கியாஸ் குழாய் பதிக்கும் பணி கடந்த 5 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. 

இதற்காக சாலையின் இருபுறத்திலும் குழி தோண்டி குழாய் பதிக்கப் பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் 100 மீட்டர் மட்டுமே முடிக்கப் பட வேண்டும். 

கல்லூரி மாணவி படுகாயம்

இதற்கிடையே இங்கு தோண்டிய குழியை சரியாக மூடவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சாலை குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு  காட்சி யளிக்கிறது. 

இந்த நிலையில் வடவள்ளி அருகே உள்ள பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி லட்சுமி பிரியா (வயது 19) என்பவர் ஆக்கி விளையாட தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். 

அவர் வடவள்ளி அருகே வந்தபோது,  அரசு பஸ் மோதி யதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்று தினமும் விபத்து நடந்து வருவதால் வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 

தினமும் விபத்து 

கோவை மருதமலை சாலையில் எப்போதுமே வாகனங்கள் செல்வது அதிகமாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க சாலையின் இருபுறத்திலும் குழாய் பதிக்க குழி தோண்டி அதை சரியாக மூடாமல் விட்டுவிட்ட தால் சாலை படுமோசமாக காட்சியளிக்கிறது. 

சில இடங்களில் பள்ளம்போன்றும் உள்ளது. இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையில் தோண்டப்பட்ட குழி காரணமாக சில இடங்களில் ரோடு குறுகலாக உள்ளது. இதனால் இந்த சாலையில் தினமும் விபத்து கள் நடந்து வருகின்றன.

 குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில்   சிக்கி காயங்களுடன் தப்பிச் செல்லும் நிலை நீடித்து வருகிறது.  

உடனடி நடவடிக்கை

எனவே சாலையில் உள்ள குழியை முறையாக மூடி உடனடியாக தார்சாலை அமைக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கியாஸ் குழாய் இன்னும் 100 மீட்டர் தூரத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். அந்த பணி முடிந்ததும் உடனடியாக சாலை அமைக்கப்படும் என்றனர்.

1 More update

Next Story