செங்கல்பட்டில் டாக்டர்கள், நர்சுகள் திடீர் சாலை மறியல்

செங்கல்பட்டில் டாக்டர்கள், நர்சுகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் அனுபமா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து கோஷமிட்டபடி 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் பற்றாக்குறை
இந்த போராட்டத்தில், நியாயமற்ற முறையில் நிலைய டாக்டரை பணியிடமாற்றம் செய்ததை உடனடியாக ரத்து செய்யவேண்டும். ஆஸ்பத்திரி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் நோயாளி மற்றும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா 3-வது அலை அதிக அளவில் பரவி வருவதால் அதை எதிர்கொள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
Related Tags :
Next Story






