வால்பாறையில் பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் படுகாயம் அடைந்தான்.

வால்பாறையில் பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் படுகாயம் அடைந்தான்.
வால்பாறை
வால்பாறையில் பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் படுகாயம் அடைந்தான்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து விவரம் வருமாறு:-
சிறுவனை தாக்கிய சிறுத்தை
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பீரஜ்நகசியா. இவர் தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லாகாத்து எஸ்டேட் பகுதியில் தங்கிருந்து தேயிலை தோட்ட பணிகளை செய்து வருகிறார். இவருடைய மகன் தீபக் (வயது 11).
இந்த சிறுவன் நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கற்றல் மையத்தில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றனர். மாலை நேரத்தில் தீபக் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது தோட்ட வழியாக ஓடி வந்த சிறுத்தை சிறுவன் தீப்க் மீது பாய்ந்து தாக்கியது. இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
சிறுத்தை தாக்கியதில் சிறுவனின் கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நல்லாகாத்து எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் தீபக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.10 ஆயிரம் நிவாரணம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் நல்லாகாத்து எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் காயமடைந்த சிறுவனின் குடும்பத்திற்கு மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்கினார்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது வால்பாறையில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் தேயிலை தோட்ட பகுதியையொட்டிய இடங்களில் வளர்ந்துள்ள புற்களை மேய்வதற்கு மான்கள், கிளையாடுகள் வரத்தொடங்கி விட்டது. இவைகளை வேட்டையாடி சாப்பிடுவதற்கு சிறுத்தைப்புலிகள் தேயிலை தோட்ட பகுதிகளுக்குள் வருகின்றன.
இந்த சமயத்தில் தேயிலை தோட்ட எஸ்டேட் பகுதியில் உள்ளவர்களை சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்களை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம். வேலைக்கு செல்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






