கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப் பாய்ந்தன 102 பேர் காயம் அடைந்தனர்


கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப் பாய்ந்தன 102 பேர் காயம் அடைந்தனர்
x
தினத்தந்தி 21 Jan 2022 9:49 PM IST (Updated: 21 Jan 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப் பாய்ந்தன 102 பேர் காயம் அடைந்தனர்


கோவை

கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப் பாய்ந்தன. இதில் 102 பேர் காயம் அடைந்தனர். மதுரை வீரர் காரை பரிசாக வென்றார்.

ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் பண்டிகையையொட்டி  அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி கோவை செட்டிப்பாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 

எனவே அங்கு நேற்று முன்தினம் முதல் புதுக்கோட்டை, தேனி, மதுரை, கரூர், திருச்சி, கோவை, அரியலூர், மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 1230 காளைகள் கொண்டு வரப்பட்டன.

உறுதிமொழி

இதில் பரிசோதனைக்கு பிறகு 873 காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. அவை நேற்று காலை வாடிவாசலுக்கு காளைகள் அழைத்து வந்து வரிசையாக நிறுத்தப்பட்டன. 

இதேபோல் மாடுபிடி வீரர்களும் வாடிவாசல் முன் குவிந்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் சமீரன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார். 

அதை திரும்பக் கூறி மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், விழா குழுவினர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.  முதல் காளையாக சரவணம்பட்டி கோவில் காளை விடப்பட்டது. 

அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 

102 வீரர்கள் காயம்

களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். ஒரே நேரத் தில் 2 வீரர்கள் காளையின் திமிலை பிடித்தால், யாருக்கும் வெற்றி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. காளைகள் மாடு பிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. வீரர்களை துரத்தி சென்று முட்டியது. 


மாடு துரத்தியதால் சில வீரர்கள் தரையில் படுத்தும், அருகில் இருந்த கம்பிகளை பிடித்து தொங்கியும் தப்பித்தனர். சில காளைகள் 5 நிமிடத்திற்கும் மேல் களத்தில் நின்று முடிந்தால் பிடித்துப் பார் என்பது போல் நின்று அச்சுறுத்தின.

ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் மொத்தம் 400 மாடு பிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் சீருடைகள் வழங்கப் பட்டு இருந்தன. 

இதில் ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச்சுற்றுக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், களத்தில் நின்று காளைகளை அடக்க தங்களின் வீரத்தை காட்டினர். 

இதில் 102 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை காண பார்வையாளர்கள்  அனுமதிக்கப்பட வில்லை. 

காளையுடன் உரிமையாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட் டனர். 

அவர்களிடம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளதாக என்று சரிபார்த்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.


ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு செல்வநாக ரத்தினம் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

காளைகளை ஏற்றி வந்த வாகனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது. 

கார் பரிசு

போட்டி மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்தது. போட்டி முடிவில் சிறந்த காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

இதில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மதுரை மாவட்டம் குருவித்துறையை சேர்ந்த வீரர் மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி காரை பரிசாக வழங்கினார்.

19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த மதுரை வீரர் பிரபாகரனுக்கு, உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 


18 காளைகளை பிடித்த திண்டுக்கல் வீரர் நத்தம் கார்த்திக் 3-ம் இடம் பிடித்தார். அவருக்கு மொபட் பரிசாக வழங்கப்பட்டது. 

சிறந்த காளை

இதுதவிர சிறந்த காளையாக சிவகங்கையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அந்த காளைக்கு காங் கேயம் பசு மற்றும் கன்றுக்குட்டி பரிசாக வழங் கப்பட்டது. 

சிவகங்கை யை சேர்ந்த ராஜேசின் காளை 2-ம் இடம், சேலத்தை சேர்ந்த செந்திலின் காளை 3-ம் இடம் வென்றது.
1 More update

Next Story