கல்குவாரி உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கில் கைதானவர்கள் சிக்கியது எப்படி

கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணம் பறித்த வழக்கில் கைதானவர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை
கல்குவாரி உரிமையாளர் வீட்டில் பணம் பறித்த வழக்கில் கைதானவர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
நோட்டமிட சென்றனர்
இந்த வழக்கில் கைதான கிணத்துக்கடவு சதீசின் தந்தை ரத்தின சாமியும், பஞ்சலிங்கமும் கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி உள்ளனர். இதில் பஞ்சலிங்கம் ஏராளமான பணத்தை ரத்தினசாமியிடம் ஏமாற்றி உள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த சதீஷ், பஞ்சலிங்கத்திடம் இருக்கும் பணத்தை எப்படியாவது அபேஸ் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளார்.
அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து பணத்தை அபேஸ் செய்ய முடிவு செய்து உள்ளார்.
இதையடுத்து வீட்டை நோட்டம்விட சதீசின் நண்பர்கள் ஆனந்த், மேத்யூ, மகேஸ்வரன், பைசல், மணிகண்டன், ராமசாமி, பிரவீன்குமார், தியாகராஜன், மோகன் குமார் ஆகியோர் கடந்த 7-ந் தேதி பஞ்சலிங்கம் வீட்டிற்கு ஒரு காரில் சென்றனர்.
காரின் எண் பதிவு
பின்னர் அவர்கள் எங்களுக்கு கம்பிவேலி அமைக்க கல் வேண்டும் என்று கேட்டு பேசிவிட்டு வீட்டை நோட்டமிட்டு விட்டு அங்கிருந்து சென்றனர். அப்போது அவர் அந்த காரின் எண்ணை பதிவு செய்து வைத்திருந்தார்.
உடனே அந்த காரின் பதிவு எண்ணை வைத்து சோதனை செய்த போது கோவையில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்ததும், அதற் கான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதும் கண்டுபிடிக்கப் பட்டது.
ஆன்லைனில் வாடகை
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் காரில் வந்தவர் களும், ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்ட செல்போன் எண்ணை யும் போலீசார் கண்டுபிடித்து விசாரணை செய்தனர். அப்போது தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண முடிந்தது.
தொடர்ந்து இதில் தலைமறைவாக உள்ள மேத்யூ, மகேஸ்வரன் உள்பட 3 பேரை தேடி வருகிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






