5 இடங்களில் கண்ணாடிகள் சேதம்


5 இடங்களில் கண்ணாடிகள் சேதம்
x
தினத்தந்தி 21 Jan 2022 10:33 PM IST (Updated: 21 Jan 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 5 இடங்களில் சேதம் அடைந்த கண்ணாடிகளை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 5 இடங்களில் சேதம் அடைந்த கண்ணாடிகளை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
  
வால்பாறை மலைப்பாதை

வால்பாறை-பொள்ளாச்சி இடையே மொத்தம் 65 கி.மீ. தூரம் ஆகும். இதில் 40 கி.மீ. தூரம் மலைப்பாதையாக உள்ளது. மீதமுள்ள 25 கி.மீ. தூரம் சமவெளிப்பகுதி சாலை ஆகும். 

இதில் ஆழியாறு சோதனை சாவடியில் இருந்து அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கருமலை பிரிவு வரை 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 

இந்த கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங் களை தெரிந்து கொள்ள கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கொண்டை ஊசி வளைவுகளிலும் குவி ஆடி என்ற கண்ணாடிகள் வைக்கப்பட்டன.

கண்ணாடிகள் சேதம்

இதனால் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த கண்ணாடிகள் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இரவு நேரத்தில் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே இறங்கி புகைப்படம் எடுக்கிறார்கள். அப் போது சிலர் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள கண்ணாடி களை உடைத்துவிட்டு சென்று உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

சரிசெய்ய வேண்டும்

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் 40 கண்ணாடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் 5 கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் வருபவர்கள் கல்லை தூக்கி எரிந்து விளையாடும்போது உடைபட்டு இருக்கிறது.

இதுபோன்றுதான் கடந்த ஆண்டிலும் செய்தனர். அப்போது பல கண்ணாடிகள் உடைந்தன. அதை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்தனர். தற்போது மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடந்து உள்ளன. எனவே அதிகாரிகள் உடைந்த கண்ணாடிகளை உடனடி யாக மாற்ற வேண்டும். 

கடும் நடவடிக்கை

மேலும் இரவு நேரத்தில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

1 More update

Next Story