இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கோவையில் நேற்று மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் திரண்டனர்

இன்று முழு ஊரடங்கு என்பதால் கோவையில் நேற்று மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் திரண்டனர்
கோவை
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கோவையில் நேற்று மீன், இறைச்சி வாங்க பொதுமக்கள் திரண்டனர்.
இன்று முழு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவித்து உள்ளது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
எனவே இன்று மருந்துகடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பால் வினியோகம் தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி இல்லை.
ஓட்டல்களில் பார்சல்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இன்று முழு ஊரடங்கு என்பதால் கோவை தியாகி குமரன் மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் உழவர் சந்தைகள் மற்றும் கடை வீதிகளில்
நேற்று காலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் திரண்டனர்.
அபராதம்
இது போல் மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்,
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று முக்கிய சாலைகளில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டு இருந்தனர்.
மேலும் கடைக்காரர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் சமூகஇடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும்
என்று போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது முகக்கவசம் இன்றி வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story






