இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
x
தினத்தந்தி 22 Jan 2022 10:20 PM IST (Updated: 22 Jan 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொள்ளாச்சி

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தொற்று குறையாததால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக சத்திர வீதி, மார்க்கெட் ரோடு, தேர்நிலை திடல் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீன் விலை உயர்வு

கடந்த வாரத்தை விட மீன் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.800, வாவல் ரூ.400, மத்தி ரூ.160, கருப்பு வாவல் ரூ.400, கொடுவா ரூ.600, சுறா ரூ.450, கட்லா ரூ.200 வரையும் விலை போனது. கடல் மீன்கள் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து காணப்பட்டது.

முமு ஊரடங்கு காரணமாக காந்தி மார்க்கெட், திரு.வி.க. மார்க்கெட்களில் பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர். இதே போன்று ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள இறைச்சி, காய்கறி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
1 More update

Next Story