பொள்ளாச்சி பகுதியில் 9,517 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொள்ளாச்சி பகுதியில் 9,517 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் 9,517 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையில் கூட்டம் இல்லாததால் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது.
சிறப்பு முகாம்
கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
கூட்டம் இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, சுல்தான்பேட்டை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
9,517 பேருக்கு தடுப்பூசி
பொள்ளாச்சி நகராட்சியில் 10 இடங்களில் நடந்த முகாமில் 252 பேர் முதல் தவணையும், 670 பேர் 2-வது தவணையும், வடக்கில் 30 இடங்களில் 394 பேர் முதல் தவணையும், 1785 பேர் 2-வது தவணையும், தெற்கில் 25 இடங்களில் 385 பேர் முதல் தவணையும், 1331 பேர் 2-வது தவணையும்,
கிணத்துக்கடவில் 370 பேர் முதல் தவணையும், 1,893 பேர் 2-வது தவணையும், ஆனைமலையில் 544 பேர் முதல் தவணையும், 1893 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 9,517 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதை தவிர பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தின் கீழ் முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தேவைப்படுவோருக்கு ஆஸ்பத்திரிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கி கொள்ள அறிவுறுத்தபபட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வால்பாறை
வால்பாறையில் நேற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் 19-வது மெகா தடுப்பூசி முகாம் 50 இடங்களில் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் வெளியூர்களில் இருந்து வந்தவர்களும் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் விட்டு இறங்கியதும் எஸ்டேட் பகுதிக்கு செல்வதற்கு முன் தடுப்பூசி போட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story






