பொள்ளாச்சி பகுதியில் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிரபல ஜவுளி கடைக்கு மூடப்பட்டது.
460 பேருக்கு பாதிப்பு
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நகர்புறங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500-யை நெருங்குகிறது. இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் நேற்று 61 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 28 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 51 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 88 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 84 பேருக்கும்,
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 148 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் மொத்தம் 460 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஜவுளி கடை மூடல்
பொள்ளாச்சியில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரியும் 35 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து அந்த ஜவுளி கடையை நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் 359 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 350 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 8 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 254 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






