முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி


முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 23 Jan 2022 9:43 PM IST (Updated: 23 Jan 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி

கோவை 

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் இயங்காததால் வெளியூர்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் பயணிகள் அவதியடைந்தனர். 

அத்துடன் அவர்கள் அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதை தவிர்க்க  முழு ஊரடங்கில் கார், ஆட்டோ வாடகை வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இதனால் ரெயில் மூலம் கோவை வந்த பயணிகள் சிரமம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.  இதுகுறித்து ஆட்டோ டிரைவர் முகமது கனி கூறும்போது, முழு ஊரடங்கான நேற்று வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டாலும், ரெயில்களில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகதான் இருந்தது. 

மேலும் வழக்கமான நாட்களில் ரெயில் நிலையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது வாடகை கிடைக்கும். ஆனால் நேற்று அவ்வாறு கிடைக்க வில்லை. வழக்கமாக தினமும் ரூ.1500 கிடைக்கும். ஆனால் நேற்று ரூ.700 மட்டுமே கிடைத்தது என்றார். 

1 More update

Next Story