தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு


தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2022 9:44 PM IST (Updated: 23 Jan 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வால்பாறை

கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

கேரளாவில் ஊரடங்கு

கேரளாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இதன்படி கேரளாவில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தமிழக-கேரள எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன்படி, மளுக்கப்பாறை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசாரும், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினரும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு

இதேபோல தமிழக-கேரள எல்லையான வீரப்பகவுண்டனூர், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய தேவைகளுக்கான வந்த வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

இதுதவிர அவசர தேவைகளுக்கான செல்பவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து சென்றனர். மேலும் அவர்களிடம் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் உள்ளதா என்றும் சோதனை செய்தனர். உரிய சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதித்தனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1 More update

Next Story