இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி
தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கோட்ட செயலாளர் பாலசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையம் எதிரே இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் கோட்ட செயலாளர் அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






