முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா


முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jan 2022 4:50 PM GMT (Updated: 24 Jan 2022 4:50 PM GMT)

முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பனைக்குளம், 
ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜாவுக்கு கடந்த 2 தினங்களாக அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி இருந்தது. இதைதொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அவர், ஒரு வார காலத்துக்கு தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு எடுத்துள்ளார். இவர் 2 கொரோனா தடுப்பூசியும், 3-வதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளார். இந்த தகவலை அவரது உதவியாளர் சிவகுமார் தெரிவித்தார்.

Next Story