ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்


ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Jan 2022 4:51 PM GMT (Updated: 24 Jan 2022 4:52 PM GMT)

பரமக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடி, 
பரமக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகார்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நயினார் கோவில், பார்த்திபனூர், சத்திரக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட பான்பராக், குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி நகர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 
இந்தநிலையில் நேற்று அதிகாலை சவுக்கத் அலி தெருவில் உள்ள ஒரு குடோனில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, பான்பராக் ஆகியவை மூடை மூடையாக லாரியில் வந்து இறங்கியது. அதை சோதனை செய்தபோது 54 மூடைகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
உடனே போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கைது 
மேலும் அந்த போதை பொருட்களை விற்பனை செய்யும் பரமக்குடியை சேர்ந்த ராமஜெயம் (வயது59), லாரி டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த மகேஷ் குமார் (39) ஆகிய 2 பேரை நகர் போலீசார் கைது செய்தனர். பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமலை குற்றப்பிரிவு போலீசாரை பாராட்டினார்.

Next Story