டெங்கு தடுப்பு நடவடிக்கையை அதிகாரி ஆய்வு


டெங்கு தடுப்பு நடவடிக்கையை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 24 Jan 2022 10:26 PM IST (Updated: 24 Jan 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே டெங்கு தடுப்பு நடவடிக்கையை அதிகாரி ஆய்வு செய்தார்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் இதுவரை, பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட மொத்தம் 16 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்த நிலையில் சுல்தான்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  

மேலும் பாப்பம்பட்டி, வலசுபாளையம் உள்பட டெங்கு பாதித்த கிராமங்களில் சுகாதார பணியாளர்கள் அபைட் கரைசல் தெளித்தல், கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இடையர்பாளையம் கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி முருகப்பா, டெங்கு தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசு உற்பத்தி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, டெங்கு காய்ச்சல் எவ்வாறு வருகிறது, அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
1 More update

Next Story