தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Jan 2022 5:22 PM GMT (Updated: 24 Jan 2022 5:22 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

புதிய பாலம் தேவை
 தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட ஆண்டித்தோப்பில் இருந்து மண்ணடி, தென்பாறை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் புத்தனாறு கால்வாய் மீது பழமையான பாலம் உள்ளது. மிகவும் குறுகலான இந்த பாலம் வலுவிழந்தும், தடுப்பு சுவர் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழமையான இந்த பாலத்தை இடித்து விட்டு விரிவாக்கம் செய்து புதிய பாலத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
     -எம்.தங்கம்,  பூதப்பாண்டி.
சுகாதார சீர்கேடு
 நாகர்கோவில் பறக்கையில் இருந்து கோவில்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புல்லுவிளை பகுதியில் பெருமாள்கோவில் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அவை முறையாக அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும்.
                                     -தினேஷ்குமார், புல்லுவிளை.
வடிகால் ஓடையை சீரமைக்க வேண்டும்
 உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் பிள்ளையார்புரம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள சாலை மற்றும் வடிகால் ஓடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையையும், வடிகால் ஓடையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                     -பிரதீஷ், பிள்ளையார்புரம்.
சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
 குலசேகரம் அருகே நாகக்கோடு சந்திப்பில் இருந்து அருமனைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது நாகக்கோடு சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                         -ஹெர்பின், குலசேகரம்.
மின் விளக்கு தேவை
 அழகப்பபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பல மின்கம்பங்களில் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தி அவற்றை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                  -த.மரிய ஜேம்ஸ், அழகப்பபுரம்.
குளம் மாசுபடும் அபாயம்
 அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமபுரம் ஊராட்சி கோழிக்கோட்டுபொத்தையில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீர் மூலம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சிலர் குளத்தின் கரையில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், குளத்து தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                -த.விசால், அனந்தபத்மநாபபுரம்.

Next Story