கலெக்டர் அலுவலகத்தில் படகுகளின் ஆவணங்களை ஒப்படைக்க மீனவர்கள் முடிவு

கலெக்டர் அலுவலகத்தில் படகுகளின் ஆவணங்களை ஒப்படைக்க மீனவர்கள் முடிவு
x
தினத்தந்தி 24 Jan 2022 5:25 PM GMT (Updated: 24 Jan 2022 5:25 PM GMT)

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 2-ந் தேதி படகின் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம், 
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 2-ந் தேதி படகின் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
ராமேசுவரத்தில்  அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். 
அதுபோல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப் பட்டுள்ள படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது போல் மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
தீர்மானம்
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்து வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி படகின் அனைத்து ஆவணங்களையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story