கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 24 Jan 2022 5:33 PM GMT (Updated: 24 Jan 2022 5:33 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசிக்கும் பாவாடைராயன் மகன் சிவா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12.50 மணியளவில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.  பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவுசெய்து மோட்டார் சைக்கிளுக்கு யாரேனும் தீ வைத்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேதம் அடைந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story