பிரியாணி கடையில் திருடிய வாலிபர் கைது


பிரியாணி கடையில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2022 6:05 PM GMT (Updated: 24 Jan 2022 6:05 PM GMT)

ஆம்பூரில் பிரியாணி கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர்

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில் சில தினங்களுக்கு முன்பு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த செல்போன், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். 

இதுகுறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த முரளி (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

Next Story