பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


பெட்ரோல் பங்க் ஊழியர்  தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2022 7:03 PM GMT (Updated: 24 Jan 2022 7:03 PM GMT)

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோட்டுச்சேரி, ஜன.25-
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்  தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
மனைவி கண்டிப்பு
காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் போலகம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்  இளங்கோவன் (வயது 42). பெட்ரோல் பங்க் ஊழியர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மேலையூரில் வேலைக்கு சென்று இருந்த ரேவதியை இளங்கோவன் வீட்டுக்கு   அழைத்து வந்தார். பின்னர் அவர் வெளியே சென்று மது குடித்துவிட்டு வந்து மனைவி, குழந்தைகளிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, “வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது இப்படி பொறுப்பின்றி குடிக்கலாமா?” என்று ரேவதி கண்டித்து அறிவுரை கூறினாராம். இதனால் இளங்கோவன் விரக்தி அடைந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மனைவியின் புடவையில் தூக்குப்போட்டு இளங்கோவன் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி மற்றும் குடும்பத்தினர், கணவரை தூக்கில் இருந்து இறக்கி, காரைக்கால் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இளங்கோவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் திரு-பட்டினம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story