4 பேரிடம் போலீசார் விசாரணை


4 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Jan 2022 7:45 PM GMT (Updated: 24 Jan 2022 7:45 PM GMT)

வத்திராயிரப்பு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்திராயிருப்பு, 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தெற்கு கோட்டையூர் காலனி குடியிருப்பு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் விவசாய பணிக்காக டிராக்டரை அப்பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் சக்கரம் ஏறியதில் தரிசு நிலத்தில் செடிகளுக்குள் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, அந்த பகுதியில் இருந்து 6 வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோட்டையூர் காலனி பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கைப்பற்றிய 6 வெடிகுண்டுகளையும் நத்தம்பட்டி அருகே தனியார் வெடிபொருள் கிட்டங்கிக்கு இடமாற்றம் செய்து, அங்கு வைத்து போலீசார் பாதுகாத்து வருகிறார்கள்.

Next Story