விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 10:24 AM GMT (Updated: 25 Jan 2022 10:24 AM GMT)

கோட்டூர் அருகே நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்
கோட்டூர் அருகே நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 கொள்முதல்
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் கடந்த 15 நாட்களாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோட்டூர் ஒன்றியம், விக்கிரபாண்டியம் பகுதியில் அறுவடை செய்த  நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக்கிடக்கிறது. 
கடந்த 15 நாட்களாக அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யமுடியாமல் காத்துகிடந்துவரும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து நேற்று திடீரென விக்கிரபாண்டியம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
 அப்போது ஆன்லைன் முன்பதிவை தவிர்த்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது உர விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. சம்பா பயிர் முற்றி வரும் நேரத்தில் கனமழை பெய்து கதிர்கள் சாய்ந்தன. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின் இக்கட்டான சூழ்நிலையில் அறுவடை செய்து கொண்டு வந்து நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக இரவு பகலாக பாதுகாப்பதில் செலவு அதிகரித்து வருகிறது. 
கொள்முதல் தொடங்கியது
விவசாயிகளின் கஷ்டத்தை அரசு உணர்ந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மார்க்கத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி கொள்முதல் நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினா். இதன்பேரில் மறியலில்  ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் தொடங்கின. 
---


Next Story