காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியதாக 1,024 பேர் மீது வழக்கு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியதாக 1,024 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Jan 2022 6:54 PM IST (Updated: 25 Jan 2022 6:54 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியதாக 1,024 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 800 அபராதமாக வசூலித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முழு ஊரடங்கு

கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் 3-வது வாரம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் முழு ஊரடங்கு உத்தரவு காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமல் படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையிலும், முகூர்த்த நாளான நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருமண விழாக்கள் நடைபெற்றதையொட்டி ஏராளமான பொதுமக்கள் அழைப்பிதழ்களை காட்டி, திருமணத்திற்கு சென்று வந்தபடி இருந்தனர்.

1,024 பேர் மீது வழக்கு

இதன் காரணமாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் சாலைகளில் போக்குவரத்து காணப்பட்ட நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும், என 1,024 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

மேலும் முழு ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2 லட்சத்து, 4 ஆயிரத்து, 800 அபராதமாக வசூலித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

1 More update

Next Story