கள்ளக்குறிச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா


கள்ளக்குறிச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா
x
தினத்தந்தி 25 Jan 2022 3:32 PM GMT (Updated: 25 Jan 2022 3:32 PM GMT)

கள்ளக்குறிச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

கள்ளக்குறிச்சி

மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல ஆலோசகர் முருகன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர்கள். இதில் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

Next Story