படிப்பிடை பயிற்சி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: திருவள்ளூர் கலெக்டர்


படிப்பிடை பயிற்சி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: திருவள்ளூர் கலெக்டர்
x
தினத்தந்தி 25 Jan 2022 3:35 PM GMT (Updated: 25 Jan 2022 3:35 PM GMT)

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் தனிப்பெரும் முயற்சியில் படிப்பிடை பயிற்சி திட்டம் தொடர்பாக தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பயிற்சி திட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் தனி பெரும் முயற்சியில் படிப்பிடை பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திருவள்ளூர் மாவட்ட மேம்பாட்டுக்காக மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நிகழ்நேர பிரச்சினைகளுக்கு தீர்வு காண திட்டமிடப்பட்ட ஒரு முயற்சியாகும். இதற்கான பயிற்சி காலத்தில் உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது.

தகுதி

கலந்து கொள்வதற்கான தகுதி விவரங்கள் வருமாறு:-

1-1-1990 அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல், சமூக அறிவியல், என்ஜினீயரிங் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் மிக்கவராக இருக்கவேண்டும். தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக எழுதும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும், தகவல் எடுத்துரைக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும். அதே போல் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு விண்ணபிக்க சான்றுகள் நகலுடன், சிறுகட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரம், சமூகம், பொது சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கான உங்களுடைய தீர்வு கட்டுரையில் இடம் பெறவேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

இதற்கான பணியிடம் திருவள்ளூர் மாவட்டத்திற்க்குள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இந்த மாதம் 31-ந் தேதி. விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரி tiruvallur.nic.in மின்னஞ்சல் முகவரி tvlrinternship@gmail.com அல்லது தபால் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட கலெக்டர், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர். தொலைபேசி எண் 7402606106, 044- 27663808 போன்ற எண்களில் தகவல் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story