வாக்காளர் தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு


வாக்காளர் தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 25 Jan 2022 3:46 PM GMT (Updated: 25 Jan 2022 3:46 PM GMT)

வாக்காளர் தினத்தையொட்டி நடந்த கட்டுரை ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசு

உடுமலை:
உடுமலையில் வாக்காளர் தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாசில்தார் வி.ராமலிங்கம் பரிசுகளை வழங்கினார்.
தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது.
அதன்படி உடுமலை தாலூகா அலுவலகத்தில் நேற்று தேசிய வாக்காளர் தினம் நடந்தது. அப்போது தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், பாட்டு, நடனம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை தாசில்தார் வி.ராமலிங்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம், தேர்தல் துணை தாசில்தார்சாந்தி, தேர்தல்பிரிவு அலுவலர்கள்அன்பரசு, கருப்புச்சாமி, பள்ளி மற்றும் கல்லூரிஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளிகள்
உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ப.விஜயா தலைமை தாங்கினார். உதவித்தலைமையாசிரியர் டி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் வே.சின்னராசு உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்சி மாணவிகள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் ராஜேந்திரன் ஒருங்கிணைத்து நடத்தினார்.
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) எம்.ஜெகநாத ஆழ்வார்சாமி தலைமை தாங்கினார். முதுகலை கணித ஆசிரியர் வி.ரமேஷ் வரவேற்றார். வாக்காளர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து ஆங்கில ஆசிரியர் என்.சந்திரன் பேசினார். அறிவியல் ஆசிரியர் க.சுரேஷ் நன்றி கூறினார்.

Next Story