தாசில்தாரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தாசில்தாரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தாசில்தாரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 25 Jan 2022 3:50 PM GMT (Updated: 2022-01-25T21:20:26+05:30)

தாசில்தாரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

துடியலூர்

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம், பாலன்நகர், பாரதியார் வீதியை சேர்ந்தவர் சர்மிளா (வயது 48).இவர் பேரூர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சபரீசன் (வயது 58). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் சபரீசன் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். குடியை நிறுத்துவதற்காக மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இருந்தாலும் அவரால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த சபரீசன் அவரது வீட்டில் யாரும் இல்லாத போது,  கேபிள் வயரை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இதுகுறித்த தகவலின் பேரில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story