மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம்


மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம்
x

மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடக்கிறது.

புதுச்சேரி, ஜன.
புதுவை மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதுச்சேரி மின்துறை 2022-23 நிதியாண்டிற்கான நிகர வருவாய் தேவை மற்றும் உத்தேச மின்கட்டண நிர்ணயம் மற்றும் பல ஆண்டுக்கான மனுக்களின் மீது பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடத்த உள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கண்ட விவரங்கள் மீதான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும்.
கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்) காணொலி காட்சியில் பங்கேற்பதற்கான இணைப்பை அவர்களுக்கு அனுப்பிவைக்க secy.jercuts@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில், தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளரிடம் குறைந்தபட்சம் கூட்டம் நடக்கும் 2 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கலாம்.
 மின்துறை விண்ணப்ப விவரங்களை http://electricity.py.gov.in மற்றும் www.jercuts.gov.in என்ற இணையதள முகவரியிலும் காணலாம். பொதுமக்கள் கலந்துகொண்டு இந்த விண்ணப்பத்தின் மேல் தங்களின் கருத்துகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story