கர்நாடக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கர்நாடக அரசை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2022 5:00 PM GMT (Updated: 25 Jan 2022 5:00 PM GMT)

கர்நாடக அரசை கண்டித்து தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
ஒகேனக்கல் 2-வது கட்ட குடிநீர் திட்டம் ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றவிட மாட்டோம் என கர்நாடக மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டசெயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், கிரைஸாமேரி, நகர செயலாளர் ஜோசுபாசு மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒகேனக்கல் 2-வது கட்ட குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்காக உருவாக்கப்படும் இந்த திட்டத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story