நெகமம் பகுதியில் நெல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


நெகமம் பகுதியில் நெல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 25 Jan 2022 5:00 PM GMT (Updated: 25 Jan 2022 5:00 PM GMT)

நெகமம் பகுதியில் நெல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நெகமம்

நெகமம் பகுதியில் நெல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நெல்லி சாகுபடி

நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்னை அதிக ளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து உள்ளனர். அதுபோன்று தேக்கு, மா, சப்போட்டா, பாக்கு போன்ற மரப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தற்போது சில விவசாயிகள் நெல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இங்குள்ள நெகமம், செட்டியக்கா பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், கோதவாடி, ஆவல்பட்டி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் நெல்லி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- 

கூடுதல் வருமானம்

நெல்லியை பொருத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சீசனில் அறுவடை செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டு வெவ்வேறு ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் எல்லா பருவத்திலும் வருவாய் ஈட்ட முடியும். நெல்லியை சாகுபடி யெ்தால் 4 மாதங்களிலேயே பூக்க தொடங்கி விடுகிறது.
 
ஆனால் 3 வருடங்கள் வரை பூக்களை உதிர்த்துவிட வேண்டும். அப்போதுதான் நல்ல மகசூல் கிடைப்பதுடன், காயும் ருசியாக இருக்கும். நெல்லி 40 வருடங்கள் மகசூல் தரக்கூடியது என்பதால் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஊடுபயிராக மரவள்ளி, சப்போட்டா, வாழை மற்றும் பயிறு வகைகளை சாகுபடி செயது கூடுதல் வருமானம் பெறலாம். 

மலை நெல்லி

தற்போது வீரிய ஒட்டு ரக நெல்லியே மகசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மலைப்பகுதியில் உள்ள நெல்லியில்தான் கூடுதல் சத்துக்கள் உண்டு. எனவே மலை நெல்லியை அழியாமல் பாதுகாக்கவும், மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் தோட்டக்கலைத் துறை மற்றும் வனத்துறை இணைந்து மலை நெல்லி நாற்றுகளை வழங்கி அவற்றை பராமரிக்க வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும். 

மேலும் இந்த விளை பொருட்களை சந்தைப்படுத்த வாய்ப்பு களையும் உருவாக்கி தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story
  • chat