காட்டு யானைக்கு சாப்பிட அரிசி கொடுத்த தொழிலாளி


காட்டு யானைக்கு சாப்பிட அரிசி கொடுத்த தொழிலாளி
x
தினத்தந்தி 25 Jan 2022 10:39 PM IST (Updated: 25 Jan 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

காட்டு யானைக்கு சாப்பிட அரிசி கொடுத்த தொழிலாளி

வால்பாறை

வால்பாறை அருகில் உள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் அதிகாலையில் காட்டு யானை புகுந்தது. பின்னர் அது தொழிலாளர்களின் வீட்டின் ஜன்னலை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு அரிசியை எடுத்து சாப்பிட்டது. 

அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த தொழிலாளி சையத்அலி, அவருடைய மனைவி பரிதாபேகம் ஆகியோர் அந்த யானைக்கு சாப்பிட அரிசி வைத்தனர். அதை பார்த்த அந்த யானை 2 பேரையும் துரத்தியதுடன், அவர்களது வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியது. 

இதில் தப்பி ஓடியபோது பரிதாபேகம் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த காட்டு யானையை துரத்தினார்கள். 

இது குறித்து தகவல் அறிந்த அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. பரிதாபேகம் வீட்டுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

1 More update

Next Story