பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும். தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் நலச்சங்கம் கோரிக்கை மனு

பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வேலூர்
வேலூர் மாவட்ட தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எவ்வித பாதுகாப்பு குளறுபடியும் இன்றி பள்ளிகளை நடத்தி வந்தோம்.
கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் அனைத்துவகை பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையிலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மிகாலும் பள்ளிகள் நடத்த தயாராக உள்ளோம் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story