2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை


2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
தினத்தந்தி 25 Jan 2022 10:40 PM IST (Updated: 25 Jan 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

கோவை

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இதன் நுழைவுவாயில் அருகே கண்ணாடி கூண்டில் செபஸ்தியார் சிலை உள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், அந்த சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். மர்ம ஆசாமிகளை கைது செய்ய வற்புறுத்தி ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தநிலையில் சிலை உடைப்பு தொடர்பாக ஒரு அமைப்பை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, சிலை உடைப்பு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

 இதில் சம்பந்தப்பட்ட ஆசாமிகளின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் துருவித்துருவி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் துப்புத்துலங்கி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

இந்த நிலையில், சிலை சேதப்படுத்தப்பட்ட  டிரினிட்டி ஆலயத்துக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. கொறடாவுமான எஸ்.பி.வேலு மணி சென்று பார்வையிட்டார். அவர், நடந்த சம்பவம் பற்றி ஆலய நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். 

1 More update

Next Story