கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு


கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 5:12 PM GMT (Updated: 25 Jan 2022 5:12 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. 
கோவில் நிலம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடியில்  வீரட்டேஸ்வரர் வகையறா கோவிலுடன் இணைந்த வண்ணமுடைய அய்யனார் கோவில் உள்ளது. வீரட்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்து இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 
மீட்பு
இதன்பேரில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராஜா போலீசார் உதவியுடன் நிலத்தை மீட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார். பொதுமக்கள் அறியும் வகையில் இந்த இடத்தில்   விளம்பர பலகை அமைத்து உள்ளனர். இந்த இடத்தின் பரப்பளவு சுமார் 1 ஏக்கர் இருக்கும் என செயல் அலுவலர் ராஜா கூறினார். 

Next Story