வேப்பத்தூரில், விவசாயிகள் சாலை மறியல்


வேப்பத்தூரில், விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2022 5:38 PM GMT (Updated: 25 Jan 2022 5:38 PM GMT)

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி வேப்பத்தூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர்:-

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி வேப்பத்தூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சாலை மறியல்

கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். இங்கு ஆயிரம் மூட்டை நெல் தேங்கி இருப்பதால் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி பூம்புகார்-கல்லணை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவிடைமருதூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், வேப்பத்தூர் அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், வேப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் வக்கீல் மனோகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் அங்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெல் கொள்முதல் நிலையம் விரைவில் திறக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. 
சாலை மறியல் காரணமாக அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் சாலை மறியல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story