நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

நெல்லையில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி:
மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராக பணியாற்றி வருபவர் சுகுமார். இவர் மதுரை அண்ணாநகர் சாத்தாமங்களத்தில் தற்போது வசித்து வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.50 லட்சம் சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார் நேற்று நெல்லை பாளையங்கோட்டை அன்புநகரில் உள்ள சுகுமாரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு காலை முதல் தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல் மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு தலைமையில் மற்றொரு போலீஸ் குழுவினர் மதுரை சாத்தமங்களத்துக்கு சென்று அங்குள்ள வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story