நீரில் மூழ்கி வாலிபர் பலி


நீரில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 Jan 2022 7:11 PM GMT (Updated: 2022-01-26T00:41:37+05:30)

நீரில் மூழ்கி வாலிபர் பலியானார்

கிருஷ்ணராயபுரம்
 கீழ வெளியூரை சேர்ந்த லோகநாதன் மகன் கிஷோர்குமார்(வயது 21). இவர் சம்பவத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து மாயனூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் ஆற்றில்  குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் கிஷோர்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் மாயனூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story