அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா


அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jan 2022 7:42 PM GMT (Updated: 25 Jan 2022 7:42 PM GMT)

ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்த அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

விருதுநகர், 
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது  அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி பணமோசடி புகார் அளித்திருந்தார். 
இவர் மீதும் பணமோசடி புகார் அளிக்கப்பட்டதால், விஜயநல்லதம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்தநிலையில் விஜயநல்ல தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மதுரையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். 

Next Story