பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது


பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 8:45 PM GMT (Updated: 2022-01-26T02:15:32+05:30)

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலவடகரையை சேர்ந்தவர் சேர்மன். இவர் பத்மநேரி விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கீழகாடுவெட்டியைச் சேர்ந்த அய்யப்பன், மூன்றடைப்பை சேர்ந்த சுடலைகண்ணு என்ற சுந்தர் ஆகிய இருவரும் சேர்மனை கத்தியை காட்டி மிரட்டி பையிலிருந்த ரூ.1115 பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சேர்மன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த அய்யப்பன், சுடலைக்கண்ணு என்ற சுந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Next Story