காரில் கடத்திய 480 மதுபாட்டில்கள் பறிமுதல்


காரில் கடத்திய  480 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Jan 2022 4:06 AM IST (Updated: 26 Jan 2022 4:06 AM IST)
t-max-icont-min-icon

காரில் கடத்திய 480 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

சங்கரன்கோவில் :
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் வந்தவர் சிவகிரி அருகே உள்ள செந்தட்டியாபுரம் புதூர் காலனி தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பதும், அனுமதியின்றி 10 பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் 480 மதுபாட்டில்கள், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
1 More update

Next Story