கோவையில் கிறிஸ்தவ ஆலய சிலை உடைப்பு பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது

கோவையில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை
கோவையில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிலை உடைப்பு
கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே, டிரினிட்டி என்ற கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. கடந்த 23-ந் தேதி இரவு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆலய வளாகத்தில் கண்ணாடி கூண்டுக்குள் இருந்த செபஸ்தியார் சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களை ஆய்வு செய்தனர்.
2 பேர் சிக்கினர்
அதில் மர்ம ஆசாமிகள் முகக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வருவதும், பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை ஆலய வளாகத்தின் அருகே நிறுத்திவிட்டு அங்கு சென்று சிலையை சேதப்படுத்திய பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் சிலையை உடைத்து சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்டனர்.
பள்ளி மாணவன்
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் இந்து முன்னணியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மற்றும் கோவை வெள்ளலூரை சேர்ந்த லாரி டிரைவர் மதன்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி னார்கள்.
இதில் மாணவன் சீர்த்திருத்த பள்ளியிலும், லாரி டிரைவர் சிறை யிலும் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய மருதாசலமூர்த்தி, தீபக் ஆகிய 2 பேரை போலீசார் தீவிர மாக தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
2 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவத்தில் இந்து முன்னணியை சேர்ந்த மொத்தம் 4 பேருக்கு தொடர்பு உள்ளது. அதில் மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த தீபக், இறங்கி சென்று சிலையை உடைத்து உள்ளார். மற்ற 3 பேரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சிலையை உடைத்ததாக தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகிறோம். அவர்களை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






