ஆபத்தை அறியாமல் ஆழியாறு அணையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

ஆபத்தை அறியாமல் ஆழியாறு அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்கி குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
ஆபத்தை அறியாமல் ஆழியாறு அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்கி குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆழியாறு அணை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆழியாறு அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்க்க கடந்த 8-ந் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பூங்கா நுழைவு வாயில் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஆழியாறு வந்தனர். பின்னர் படகு இல்லம் வழியாக ஆழியார் அணைக்குள் சென்றனர். ஆபத்தை உணராமல் சிலர் அணையில் குளித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கண்காணிப்பு இல்லை
கொரோனா பரவல் காரணமாக ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் வழியாக ஆழியாறு அணையில் இறங்கி குளிக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆழியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை. தற்போது பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் கூடுவதால் மேலும் தொற்று அதிகரிக்க கூடும்.
எனவே அதிகாரிகள் அணை மற்றும் பூங்கா பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் சுற்றுலா பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






