கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்


கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்
x
தினத்தந்தி 27 Jan 2022 12:06 AM IST (Updated: 27 Jan 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சுல்தான்பேட்டை

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

கொப்பரை தேங்காய்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 15 லட்சத்து 60 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இருந்து பறிக்கப்படும்  தேங் காய்கள் விருதுநகர், தூத்துக்குடி, மதுரை என பல்வேறு பகுதி களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைக்கப்பட்டு கொப்பரை களாக மாற்றி செஞ்சேரி அரசு கொப்பரை கொள்முதல் மையம், தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகம் உள்ள காங்கயம், வெள்ளக் கோவில் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. 

கொள்முதல் மையம்

இந்த நிலையில் அரசு கொள்முதல் மையத்தைவிட வெளிமார்க் கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை அதிகமாக இருந்ததால் விவசாயிகள் அரசு கொள்முதல் மையத்தை நாடவில்லை. எனவே கடந்த மாதம் அரசு கொள்முதல் மையத்தில் கொப்பரை கொள் முதல் நிறுத்தப்பட்டது. 

தற்போது வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை சரிந்து உள்ளது. எனவே செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  வெள்ளிக்கிழமை முதல் கொப்பரை கொள் முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஒருங்கிணைப்பாளர் ஈசாக்கு கூறியதாவது:- 

5 ஆயிரம் மெட்ரிக் டன்

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரவை கொப் பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. 

மையத்தில் கொப்பரை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி பாஸ் புத்தகம் நகல் ஆகியவைகளை கொண்டு சென்று ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 

கடந்த ஆண்டு அரவை கொப்பரை கிலோ ரூ.103-35-க்கும், பந்து கொப்பரை ரூ.106-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. எ

னவே இந்த ஆண்டில் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Next Story