உதவியாளரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை


உதவியாளரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Jan 2022 7:45 PM GMT (Updated: 26 Jan 2022 7:45 PM GMT)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விருதுநகர், 
முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபு ராஜ் மற்றும் வக்கீல் முத்துபாண்டி ஆகியோர் மீது கொடுத்த பணமோசடி புகார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.  இந்தநிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அவரது மற்றொரு உதவியாளர் வக்கீல் முத்துப்பாண்டியிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவினரும் ஆஜராகியிருந்தனர். 

Next Story