வத்திராயிருப்பு பகுதியில் திடீர் மழை


வத்திராயிருப்பு பகுதியில் திடீர் மழை
x
தினத்தந்தி 27 Jan 2022 1:21 AM IST (Updated: 27 Jan 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் பெய்த திடீர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் பெய்த திடீர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பலத்த மழை 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை அளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த சாரல் மலையானது சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. வத்திராயிருப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது.  மழை நீருடன், வாருகால் கழிவுநீர் நீரும் சேர்ந்து சாலையில் சென்றால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 
அக்ரஹாரம் வடக்கு தெருவில் மழைநீர் செல்ல வாருகால் வசதி சரிவர இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி 
வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் தாழ்வாக இருப்பதால் மழை நீர் உடன் கழிவு நீர் சேர்ந்து சாலையில் சென்றது. 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது கோடை கால நெல் நடவு செய்வதற்காக நாற்றாங்கால் பாவி உள்ள நிலையில் தற்போது  பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 More update

Related Tags :
Next Story